உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.ஜி.வி., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பி.ஜி.வி., பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.இங்கு, முதல் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், அறிவியல் அடிப்படை கருத்துக்களை மையமாகக் கொண்டு, விபத்தை தடுக்கும் கருவி, நீர் அலாரம், நீர் சுத்திகரிப்பு கருவி, மழை நீர் சுத்திகரிப்பு, நீர் தெளிப்பான் முறை, சொட்டு நீர் பாசனம், மைக்ரோஸ்கோப் செயல்படும்முறை, கழிவுநீர் சுத்திகரிப்பு மேலாண்மை, கழிவிலிருந்து பயோ கேஸ் தயாரிப்பு முறை, மருத்துவ குணம் உள்ள செடி வகைகள், மழை நீர் சேகரிப்பு மற்றும் ரோபோக்களை காட்சிப்படுத்தினர்.மேலும், சத்தான உணவு வகைகள், மருத்துவ உணவுகள் மற்றும் உணவு கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், முதல் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், தங்கள் பாடத் திட்டத்தில் உள்ள செய்முறை மாதிரிகளை உருவாக்கி காட்சிப்படுத்தினர்.நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தம்பு மேல்நிலைப் பள்ளியின் கல்வி இயக்குனர் குணசேகர், பங்கேற்று மாணவர்களிடம் உரையாடினார். பள்ளி தாளாளர் முத்துலட்சுமி, அறிவியல் கண்காட்சி மாதிரிகளை உருவாக்கிய மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி