உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சி: மாணவர்கள் அசத்தல்

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே வரப்பாளையம் பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.பள்ளியில் படிக்கும் கே.ஜி.வகுப்பு குழந்தைகளிடம் அறிவியல் உருவாக்கத்தை உற்சாகப்படுத்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கண்காட்சியில், சிறு குடும்பம், பெரிய குடும்பம், தாவரங்களின் பாகங்கள், உயிருள்ள மற்றும் உயிரற்ற பொருட்கள், வாகன போக்குவரத்து, காய்கறிகள், பழங்கள், பூச்சி வகைகள், பறவை இனங்கள், வனவிலங்குகள், வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அறிவியல் மாதிரிகளை பள்ளி குழந்தைகள் காட்சிக்கு வைத்து இருந்தனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை