உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாரணர் பயிற்சி முகாம் துவக்கம்

சாரணர் பயிற்சி முகாம் துவக்கம்

வால்பாறை; வால்பாறையில், சாரண, சாரணியருக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் நேற்று துவங்கியது.ஆனைமலை மாவட்ட பாரத சாரண, சாரணிய இயக்கத்தின் சார்பில், ஆளுநர் விருதுக்கு தயார் படுத்தும் விதமாக, மூன்று நாட்கள் பயிற்சி முகாம் துவக்க விழா, வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.துவக்க விழாவுக்கு, வட்டார கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சிவசுப்ரமணியம், சாரண, சாரணிய மாவட்ட முதன்மை ஆணையாளர் சிவன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆனைமலை மாவட்ட பாரத சாரண, சாரணியர் இயக்க பொருளாளர் முத்தையாசாமி வரவேற்றார். பயிற்சி முகாமை நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி துவக்கி வைத்து பேசுகையில், ''படிப்பில் மட்டுமல்லாது, விளையாட்டு போட்டிகளிலும் மாணவர்கள் பங்கேற்க வேண்டும். படிக்கும் வயதில் சமூக அக்கறையுடன் பொதுசேவைகளில் அதிகளவில் ஈடுபட வேண்டும்,'' என்றார்.மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில், 23 பள்ளிகளை சேர்ந்த, 140 சாரண, சாரணியர் பங்கேற்றுள்ளனர். தி.மு.க., நகர செயலாளர் சுதாகர், கவுன்சிலர் பாஸ்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகாமில், அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.பயிற்சி முகாம் ஏற்பாடுகளை, சாரண, சாரணியர் இயக்க செயலாளர் ராஜா, மாவட்ட அமைப்பு ஆணையாளர் ராகவன் மற்றும் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை