உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது

சார் -பதிவாளர் அலுவலகத்தில் சோதனை; கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது

போத்தனூர்; கோவை வெள்ளலூர் சார் -பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.93 லட்சம் சிக்கியது. வெள்ளலூரில் சிங்காநல்லூர் சார் - பதிவாளர் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு இணை சார்- -பதிவாளராக ஜெஸிந்தா, சார்- பதிவாளராக ரகோத்தமன் உள்ளனர். இங்கு பத்திர பதிவில் முறைகேடுகள், பத்திர பதிவிற்கு லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இந்நிலையில் நேற்று மாலை, 3:30 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை கூடுதல் எஸ்.பி.ராஜேஷ் அறிவுறுத்தலில், இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், பிரபுதாஸ் உள்ளிட்டோர் அடங்கிய குழு, சார்- பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தது. அலுவலக கதவுகள் மூடப்பட்டு, ஊழியர்கள் வெளியேறக்கூடாது என அறிவுறுத்தினர். தொடர்ந்து நடந்த சோதனையில் இணை சார் -பதிவாளர், சார்- பதிவாளர் அறைகளில் இருந்து கணக்கில் வராத, 1.93 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து ஜெஸிந்தா, ரகோத்தமன், உதவியாளர் ரவிச்சந்திரன், மற்றும் புரோக்கர் ரமேஷ் ஆகிய நால்வரிடம் விசாரணை நடந்தது. ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக இரவு, 8:30 மணியை கடந்தும் விசாரணை நீடித்தது. இந்த அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து அதிகாரிகள் சிக்குவது மூன்றாவது முறையாகும். இங்கு அதிகளவு பத்திர பதிவுகள் நடப்பதால், லஞ்சமும் அதிகளவு விளையாடுகிறது. யார் சிக்கினால் எனக்கென்ன எனும் நினைப்பில், பதவிக்கு வருவோர் லஞ்சம் பெற தயங்குவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ