இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி; ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் அதிரடி
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சி.டி.சி.ஏ.,) இரண்டாவது டிவிஷன் போட்டி, எஸ்.என்.எம்.வி., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணியும், ஆர்.கே.எஸ்., கல்வி நிலையம் நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.பேட்டிங் செய்த ஆறுமுகம் லெவன் பேட்ரியாட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 49.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 197 ரன்கள் எடுத்தது. வீரர்கள் சந்தீப், 72 ரன்களும், பிரதீப் பாண்டியன், 54 ரன்களும் எடுத்தனர். எதிரணி வீரர்களான கந்தசாமி நான்கு விக்கெட்களும், ரித்தின் அன்பு மூன்று விக்கெட்களும் வீழ்த்தினர்.ஆர்.கே.எஸ்., அணியினர், 45.4 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 198 ரன்கள் எடுத்தனர். வீரர் பார்த்திபன், 67 ரன்களும், ஜீவா, 49 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.மூன்றாவது டிவிஷன் போட்டியில், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப நிறுவன கிரிக்கெட் கிளப் அணியும், கோவை காம்ரேட்ஸ் அணியும் மோதின.பேட்டிங் செய்த சக்தி அணியினர், 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 169 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் சபரி ஹரிஹரன், 62 ரன்களும், விக்னேஷ், 41 ரன்களும் எடுத்தனர். ரோகித் ராம் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.அடுத்து விளையாடிய, கோவை காம்ரேட்ஸ் அணியினர், 40.4 ஓவரில் ஏழு விக்கெட் இழப்புக்கு, 172 ரன்கள் எடுத்தனர். வீரர்கள் மஹாராஜ், 58 ரன்களும், ஜான் பாப்டிஸ்ட், 37 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து, போட்டிகள் நடக்கின்றன.