உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாம் பருவ பாட புத்தகம் பள்ளிகளில் இன்று விநியோகம்

இரண்டாம் பருவ பாட புத்தகம் பள்ளிகளில் இன்று விநியோகம்

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்துக்கு உட்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இரண்டாம் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தமிழ்நாடு பாடநுால் கழகத்திலிருந்து தேவைப்பட்டியல் அடிப்படையில் பாட புத்தகங்கள், ஒவ்வொரு மாவட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. 1ம் வகுப்பு முதல், 7ம் வகுப்பு வரை பருவம் அடிப்படையிலும், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஒரே புத்தகமாகவும் வழங்கப்படுகிறது. முதல் பருவம் முடிவடைந்து, இன்று, முதல் இரண்டாம் பருவம் தொடங்க உள்ளதால், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், 1ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் முதல் நாளான இன்று மாணவ, மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை வழங்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதால், பாட புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை