பாதாள சாக்கடை பணிகளை சீக்கிரம் முடிக்க சியா கோரிக்கை
கோவை; சின்னவேடம்பட்டி பகுதியில் மேற்கொள்ளப்படும், பாதாள சாக்கடைப் பணிகளை நேரில் ஆய்வு செய்து, துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சின்னவேடம்பட்டி இண்டஸ்ட்ரியல் அசோசியேஷன் (சியா) சார்பில், மேயரிடம் வலியுறுத்தப்பட்டது.மேயர் ரங்கநாயகியிடம் சியா சார்பில், கொடுக்கப்பட்ட மனுவில், 'சின்னவேடம்பட்டி பகுதியில் மாநகராட்சி சார்பாக, பாதாளச் சாக்கடைப் பணிகள் நடக்கின்றன. இதைப் பார்வையிட்டு, துரிதப்படுத்த வேண்டும். சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும்.இங்குள்ள ஏராளமான குறு, சிறு, நிறுவன தொழிற்சாலைகளில் இருந்து, உற்பத்திப் பொருட்களை உரிய நேரத்தில் வினியோகிக்க முடிவதில்லை. உடைப்பு ஏற்பட்ட குழாய்களைச் சரி செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.'சியா' தலைவர் தேவகுமார், நிர்வாகிகள் உடனிருந்தனர்.