மேலும் செய்திகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
04-May-2025
அன்னுார்; காட்டம்பட்டி, செம்பியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.காட்டம்பட்டியில் பழமையான சித்தி விநாயகர் மற்றும் செம்பியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக கருவறை, கோபுரம், சுற்று மண்டபம் ஆகியவை பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன. இத்துடன் பட்டத்தரசி அம்மன் கோவில், அரவான் கோவில்களும் வர்ணம் பூசப்பட்டு திருப்பணி செய்யப்பட்டன.கும்பாபிஷேக விழா வருகிற 31ம் தேதி அதிகாலை விநாயகர் வேள்வியுடன் துவங்குகிறது. மாலையில் காப்பு கட்டுதல், முதற்கால வேள்வி பூஜை, கோபுர கலசம் வைத்தல், எண் வகை மருந்து சாத்துதல் நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு காட்டம்பட்டி கணேசன் கிராமிய கலைக்குழுவின் வள்ளி கும்மியாட்டம் நடக்கிறது.வருகிற ஜூன் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு சித்தி விநாயகர், செம்பியம்மன், பட்டத்தரசி அம்மன், அரவான் கோவில் ஆகியவற்றுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் அருளுரை வழங்குகின்றனர். அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பஜனை நடக்கிறது. மதியம் அலங்கார பூஜை நடைபெறுகிறது.
04-May-2025