வேளாண் பல்கலையில் நடந்த கருத்தரங்கு
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலை, தாவர உயிரி தொழில்நுட்பத் துறையில், 'உயிரி தொழிற்சாலைகளாக தாவரங்கள்: நிலையான உற்பத்தியின் எதிர்காலம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.ஸ்வீடன் வேளாண் அறிவியல் பல்கலை மற்றும் ஓரெப்ரோ பல்கலை தாவர உயிரி தொழில்நுட்பத்தின் இணை பேராசிரியர் செல்வராஜு கனகராஜன் உரையாற்றினார்.அவர் தனது உரையில், தாவரங்களில் இருந்து மருந்துகள், உயிரி எரிபொருள்கள் மற்றும் பிற தொழிற்துறை மதிப்பு மிக்க சேர்மங்களை, உற்பத்தி செய்யும் உயிரி தொழிற்சாலைகளை, தாவரங்களை மேம்படுத்துவதில் புதிய அணுகுமுறைகள் குறித்து விவரித்தார்.தாவர மூல்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிலைய இயக்குநர் செந்தில் பேசுகையில், “உணவுப் பாதுகாப்பு, பருவ நிலை மாற்றம் மற்றும் நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில், அதிநவீன உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஒருங்கிணைப்பது முக்கியத்துவம் வாய்ந்தது,” என்றார்.பேராசிரியர் கோகிலாதேவி, கல்வியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.