உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காரமடை அரங்கநாதர் கோவிலில் சேனை முதலி திருநட்சத்திர வைபவம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் சேனை முதலி திருநட்சத்திர வைபவம்

மேட்டுப்பாளையம்: சேனை முதலி அதாவது படை தளபதி வைபவம், காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது. அதிகாலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், கால சந்தி பூஜை, சேனை முதலி உற்சவமூர்த்திக்கு திருமஞ்சனம், மலர் அலங்காரம், மந்திர புஷ்பம், அஷ்டோத்திரம் மங்கள ஆரத்தி நடந்தது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த வைபவத்தில் ஸ்தலத்தார்கள், அர்ச்சகர்கள், கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் மற்றும் கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) போபிஷானி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை