மேலும் செய்திகள்
அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் சேர்க்கை
03-Jun-2025
வால்பாறை ; வால்பாறையில் உள்ள அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் முன் வர வேண்டும் என்று திட்ட அலுவலர் தெரிவித்துள்ளார்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறை மலைப்பகுதியில், 43 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இந்த அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை அங்கன்வாடி பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் (பொ) சூர்யா கூறியதாவது:குழந்தைகள் மூளைத்திறன் வளர்ச்சியடைய அங்கன்வாடி மையங்களில், 2 வயது முதல் 4 வயது பூர்த்தியான குழந்தைகளுக்கு, ஆரம்ப கல்வி கற்றுத்தரப்படுகிறது.குழந்தைகளின் அறிவாற்றலை துாண்டும் வகையில் கதை, பாட்டு, விளையாட்டு வாயிலாக கல்வி கற்றுத்தரப்படுகிறது. அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் கல்வி கற்க தேவையான உபகரணங்கள் உள்ளன.அங்கன்வாடியில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது. ஊட்டசத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு, அவர்களுக்கு நாள் தோறும் சத்தாண உணவும் வழங்கப்படுகிறது.குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தேவையான உணவு வகைகளை அங்கன்வாடி வாயிலாக வழங்கப்படுகிறது.வால்பாறையில் அங்கன்வாடி மையங்களிலும் மழலையர் வகுப்புக்கள் துவங்க தயார் நிலையில் உள்ளோம். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்க்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
03-Jun-2025