உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனஅழுத்தம் போக்க முதியோர் கிளப் உதவும்

மனஅழுத்தம் போக்க முதியோர் கிளப் உதவும்

முதியவர்கள், பணியில் இருந்து விடுபடும் போது கிடைக்கும் தொகைக்கு, எந்த வித கமிட்மென்ட்டும் வைக்காமல், அவரவர்க்கு ஒதுக்கி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்கிறார், மாவட்ட முன்னோடி வங்கி நிதிசார் ஆலோசகர் ரவி.அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:n பென்ஷன் இருக்கிறது என நம்பி, பலர் பணி ஓய்வுக்கு பின் கிடைக்கும் தொகையை மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்துவிட்டு, இறுதியில் பல்வேறு சங்கடங்களுக்கு ஆளாவதை காணமுடிகிறது. இதில், முடிந்தவற்றை மட்டும்குடும்பத்திற்கு கொடுத்துவிட்டு, அவரவர் பெயரில் பல்வேறு பிரிவுகளில், முதலீடு செய்து கொள்வதே பாதுகாப்பானது.n மிகவும் கவனமாக, அதிக ரிஸ்க் இருப்பதை தேர்வு செய்யாமல், வங்கி டெபாசிட், மியூச்சுவல் பண்ட், ேஷர் என பிரித்து, முதலீடு செய்ய வேண்டும். சுயமாக முதலீடு செய்ய தெரியாதவர்கள், முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி ஏமாந்துவிடாமல், நன்கு தெரிந்தவர்களின் உதவியுடன் கவனமாக முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டி என சொல்லும் ஒருவரையும் நம்பி ஏமாற வேண்டாம்.n பென்ஷன் இல்லாதவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணி முடிந்து கிடைக்கும் தொகையை முழுமையாக, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். 40 வயதை தாண்டும் போதே, பணி ஓய்வுக்கு பின்னர் நிதிநிலையை திட்டமிட்டு சேமிப்பு, முதலீடு செய்ய வேண்டியது அவசியம்.n வங்கிகளில் டெபாசிட் செய்யும் தொகைக்கு முன், ஒருவரை மட்டுமே நாமினியாக போட முடியும். தற்போது புதிய மாறுதல் படி, நான்கு நபர்களை நாமினியாக போட்டுக்கொள்ளலாம். எங்கெங்கு முதலீடு செய்துள்ளோமோ அங்கு, நாமினி பெயரை மறக்காமல் பதிவு செய்துகொள்வது, அவர்களின் சிரமத்தை குறைக்கும்.n மத்திய, மாநில காப்பீடு திட்டங்களில் இணைந்து கொள்வதுடன், வசதிக்கு ஏற்ப இன்சூரன்ஸ் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.n எங்கு முதலீடு உள்ளது, அவசர தேவை எண்கள், யாருக்கு கடன் கொடுத்துள்ளோம், கடன் பெற்றுள்ளோம், எவ்வளவு திரும்ப செலுத்தியுள்ளோம், முக்கிய தொடர்பு எண்கள் போன்றவற்றை ஒரு டைரியில் கட்டாயம் எழுதி பராமரிக்க வேண்டும். பல ஆண்கள், முக்கிய தகவல்களை மனைவிக்கு கூட சொல்லாமல் இறந்துவிடுவதால், பல சிக்கல்களை வாரிசுகள் எதிர்கொள்கின்றனர். முதுமை வயதில் நமக்கு ஏற்படும் ஞாபக மறதி பிரச்னைக்கும், இது தீர்வாக இருக்கும்.n 60 வயதுக்கு பின், நிலம் தொடர்பான தேவையற்ற தகராறு, வழக்குகள் போன்றவற்றில் சிக்க வேண்டாம். இச்சூழல், முதுமை காலம் முழுவதும் மன அழுத்தத்திற்கு தள்ளிவிடும். 60 வயதுக்கு முன்பே நம் நிதி, சொத்து சார்ந்த நெருக்கடிகள் இருப்பின், தீர்வு காண்பது சிறந்தது.n சமீபகாலமாக தொலைபேசி அழைப்புகள் வாயிலாக, நடைபெறும் பண மோசடி குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.n நீங்கள் செல்லும் பொது இடங்கள், அலுவலகங்களில் ஓய்வு பெறுபவர்கள் அல்லது முதியவர்களை இணைத்து 'வாக்கிங் கிளப்', 'டாக்கிங் கிளப்' என்பதை உருவாக்கி, தினந்தோறும் சந்தியுங்கள். இதன் வாயிலாக, நல்ல நட்புகள் தொடர்வதுடன் மன அழுத்தம் குறையும். வயதான ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் இதுபோன்ற கிளப்களை உருவாக்கி, கோவில்கள் செல்வது, சுற்றுலா செல்வது என திட்டமிட்டு, அழகாக முதுமையை கொண்டாடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி