மேலும் செய்திகள்
மாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா
23-May-2025
சூலுார் : சூலுார் அடுத்த காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவில் பழமையானது. இங்கு, நேற்று காலை, 7:00 மணிக்கு, மூன்றாம் ஆண்டு விழா விநாயகர் பூஜையுடன் துவங்கியது. கலசங்கள் நிறுவப்பட்டு, சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை மற்றும் ஹோமம் நடந்தது. காலை, 9:00 மணிக்கு, ஸ்ரீ சென்னியாண்டவ பெருமான் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கலசாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, அர்ச்சனை அலங்கார பூஜை, தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சென்னியாண்டவர் அருள்பாலித்தார். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.
23-May-2025