உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பையை தரம் பிரித்து கொடுங்க! நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு

குப்பையை தரம் பிரித்து கொடுங்க! நகராட்சி ஊழியர்கள் விழிப்புணர்வு

வால்பாறை; துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், நகரை துாய்மைப்படுத்தும் வகையில், மக்கள் மத்தியில் வால்பாறை நகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.வால்பாறை நகராட்சியில், துாய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.நகராட்சி துப்புரவு அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், வால்பாறையை சுகாதாரமான நகராட்சியாக மாற்ற, பொதுமக்கள் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பைக்கழிவுகளை வீதியில் வீசக்கூடாது.தடையை மீறி குப்பை கொட்டுவது கண்டறியப்பட்டால், உடனடியாக அபராதம் விதிக்கப்படும். அதே போல் ஆற்றோரப்பகுதியில் வீடு கட்டி வசிக்கும் மக்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை தரம் பிரித்து, துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சுற்றுப்புற சூழலை சுகாதாரமான முறையில் வைத்துக்கொள்வது பொதுமக்களின் கடமையாகும்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரும், உள்ளூர் மக்களும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து, துணிப்பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சுகாதார பணி மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி