சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணி தாமதம்
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகள் தாமதமாவதால், மக்கள் அவதி அடைந்துள்ளனர். கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், இந்த சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகளுக்காக கடந்த, 10 நாட்களுக்கு முன்பு ரோடு தோண்டப்பட்டது. அதன் பின் சீரமைப்பு பணிகள் தற்போது வரை துவங்கவில்லை. இதனால் பைக் ஓட்டுநர்கள் பலர் தடுமாறி செல்கிறார்கள். மேலும், மழைக்காலத்தில் ரோட்டின் குழியில் மழைநீர் தேங்கி இருப்பதால், இரவு நேரத்தில் சர்வீஸ் ரோடு வழியாக வரும் வாகன ஓட்டுநர்கள் சிலர், நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, விரைவில் சர்வீஸ் ரோடு சீரமைப்பு பணிகளை துவங்க வேண்டும்.