உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவா பாரதியின் 80வது வார அன்னதான சேவை

சேவா பாரதியின் 80வது வார அன்னதான சேவை

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலூர் கவுண்டம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேவா பாரதியின், 80வது வார அன்னதான நிகழ்ச்சி நடந்தது.கூடலூர் கவுண்டம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு மருத்துவ சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. அந்நாளில் சேவா பாரதி அமைப்பு சார்பில், கர்ப்பிணிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று நடந்த, 80வது வார அன்னதான நிகழ்ச்சியில் சேவா பாரதியின் மாநில செயலாளர் அனந்த பகவதி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் கீதா, கோட்ட பொதுச் செயலாளர் முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ