உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநில விளையாட்டுப் போட்டிக்கு அன்னுார் வீரர்கள் ஏழு பேர் தேர்வு

மாநில விளையாட்டுப் போட்டிக்கு அன்னுார் வீரர்கள் ஏழு பேர் தேர்வு

அன்னூர்: அன்னூரில் இருந்து குடியரசு தின மாநில விளையாட்டுப் போட்டிக்கு, ஏழு பேர் தகுதி பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த மாதம் குடியரசு தின விழா குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள், கோவை நேரு விளையாட்டரங்கில் நடந்தன. இதில், அன்னூர் அத்லெட்டிக் கிளப்பைச் சேர்ந்த ஏழு பேர் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். தட்டெறிதலில் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், நிர்மல் மற்றும் ஜெஸ்சி இரண்டாம் இடம் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்ட மாணவர் பிரிவில், இனியவன் முதலிடமும், மாணவியர் பிரிவில் ஜெனிபர் முதலிடமும், நேகா இரண்டாம் இடமும் பெற்றனர். ஈட்டி எறிதலில் மாணவி சுபாஷினி முதலிடம் பெற்றார். 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் தட்டெறிதலில் ஸ்ரீநாத் முதலிடம் பெற்றுள்ளார். ஏழு பேரும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாணவர் இனியவன் 41.52 மீ., தூரம் எறிந்து சாதித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை