மேலும் செய்திகள்
தே.மு.தி.க., ஆர்ப்பாட்டம்..
07-Jan-2025
பொள்ளாச்சி; கோவை தெற்கு மாவட்ட தே.மு.தி.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நேற்று நடந்தது. மாவட்ட பொறுப்பாளர் வனிதா தலைமை வகித்தார்.மாவட்ட அவைத்தலைவர் ஜெகன், மாவட்ட பொருளாளர் முருகேசன், துணை செயலாளர்கள் தனலட்சுமி, ரவிச்சந்திரன், கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகர செயலளர் கணேசன் வரவேற்றார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் மருதப்பன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களுடன், 1,000 ரூபாய் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.மாநில செயற்குழு உறுப்பினர் முருகானந்தம், தலைமை பொதுக்குழு உறுப்பினர் முருகன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.* உடுமலையில் தே.மு.தி.க., சார்பில், பொங்கல் பண்டிகைக்கு, ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், உடுமலையில் சட்ட விரோத மது விற்பனை, ஒரு நம்பர் லாட்டரி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தடுக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பஸ் ஸ்டாண்ட் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பாக்கிய செல்வராஜ் தலைமை வகித்தார். நகர செயலாளர் ராமச்சந்திரன், தலைவர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ராஜா கருணாகரன், பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
07-Jan-2025