உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நண்பர் மீது போலீசில் புகார்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை; நண்பர் மீது போலீசில் புகார்

கோவை : இளம் பெண்ணை ஆபாசமாக வீடியோ எடுத்து, பாலியல் தொல்லை கொடுத்த நண்பர் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு, 2017ம் ஆண்டு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது கணவருக்கு கோவையில் வேலை கிடைத்ததால், 2023ம் ஆண்டு, கோவைக்கு குடும்பத்துடன் வந்தனர்.இதனிடையே, அப்பெண்ணுடன் பள்ளியில் படித்த பாசித் அகமது, 26 என்பவர் நட்பாக பழகி வந்துள்ளார். அப்பெண் தனது கணவரிடமும் இது குறித்து தெரிவித்துள்ளார். கடந்த செப்., 4ம் தேதி பாசித் அகமது, பெண்ணையும், குழந்தைகளையும் அவரது கணவரின் அனுமதியுடன் அழைத்துச் சென்றார்.கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள, ஒரு தங்கும் விடுதிக்கு அழைத்துச்சென்றுள்ளார். அவர்களுக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். ஜூஸ் குடித்ததும் இளம்பெண் மயக்கமடைந்தார். பாசித் அகமது அவரை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்தார்.பின், அந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்துள்ளார். அப்பெண் மத்திய அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை