மேலும் செய்திகள்
அகோர வீரபத்ரகாளியம்மன் கோவில் திருவிழா துவக்கம்
30-May-2025
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில், இன்று முதல் 13ஆம் தேதி வரை திருவிழா நடக்கிறது.கிணத்துக்கடவு, கோதவாடி சக்தி மாரியம்மன் கோவிலில், முதலாம் ஆண்டு நோன்பு சாட்டு திருவிழா நிகழ்ச்சிகள் இன்று (2ம் தேதி) துவங்குகிறது. இதில், காலை 6:00 மணிக்கு, கொடியேற்றும் நிகழ்வு நடக்கிறது.வரும் 6ம் தேதி, காலை 6:00 மணிக்கு, கோவிலில் முகூர்த்தக்கால் நடுதல் நடக்கிறது. 9ம் தேதி, காலையில், கணபதி ஹோமம், முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்வும், மாலையில் பூவோடு எடுத்தலும் நடக்கிறது.வரும் 10ம் தேதி, காலையில், பூவோடு விளையாட்டு, வஞ்சியம்மன் பொங்கல், சக்தி கரகம் எடுத்து வருதல், 11ம் தேதி, காலையில், அம்மன் திருக்கல்யாணம், மா விளக்கு, கிடாய் வெட்டுதல் நடக்கிறது. தொடர்ந்து மாலையில், கம்பம் ஆற்றில் விடும் நிகழ்வு நடக்கிறது.வரும் 12ம் தேதி, மஞ்சள் நீராடுதல், அம்மன் திருவீதி உலாவும், 13ம் தேதி, சுவாமிக்கு மகா அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடக்கிறது.
30-May-2025