உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது

சாந்திவனம் ஆக.20ம் தேதி வரை செயல்படாது

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் சாந்திவனம் எரிவாயு தகனக் கூடத்தில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை மூடப்படுகிறது. மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம் பிள்ளை மயானத்தில், 2013ம் ஆண்டு சாந்தி வனம் எரிவாயு தகனக் கூடம் (கிரிமிட்டோரியம்) அமைக்கப்பட்டு உள்ளது. இதை மேட்டுப்பாளையம் ரோட்டரி சங்கம் நிர்வாகம் செய்து வருகிறது. மேலும் எரிவாயு தகன கூடத்தில், சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் செயல் திறன் ஆகியவற்றை உயர்ந்த தரத்திற்கு உயர்த்தவும், பொதுமக்களுக்கு சிறந்த வசதிகள் செய்து கொடுக்கவும், பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஆகஸ்ட் 1ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை தற்காலிகமாக மேட்டுப்பாளையம் எரிவாயு தகனக்கூடம் செயல்படாது. 21ம் தேதியிலிருந்து மீண்டும் துவங்கும் என, மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதா அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை