உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உலக நன்மை வேண்டி சிவனடியார் நடைபயணம்

உலக நன்மை வேண்டி சிவனடியார் நடைபயணம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் இருந்து சிதம்பரத்துக்கு உலக சிவனடியார்கள் திருக்கூட அடியார் நேற்று நடைபயணம் மேற்கொண்டார். உலக சிவனடியார்கள் திருக்கூடத்தின் அடியார் சிவமணிவாசகம், ஹிந்து தர்மம் மேன்மேலும் தழைத்து ஓங்கவும், உலக நன்மை வேண்டியும் சிதம்பரத்துக்கு நடைபயணம் செல்லும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து, நடைபயணத்தை துவக்கிய அவர், சிதம்பரத்தில் நிறைவு செய்ய உள்ளார்.இவரை, உலக சிவனடியார்கள் திருக்கூடத்தினர் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை