உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஷூ

அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஷூ

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு, நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு 'ஷூ' வழங்கப்பட்டது.கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட, நெ.10 முத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 100 மாணவர்கள் படிக்கின்றனர். இதில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவருக்கும், சிறகுகள் அறக்கட்டளை சார்பில் 'ஷூ' வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் நர்மதா, ஊராட்சித் தலைவர் சதீஷ்குமார், சிறகுகள் அறக்கட்டளை நிர்வாகி ஆனந்த், ஆசிரியர்கள், மாணவர்கள் என, பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை