உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிழற்கூரை முன்பாக கடைகள்: காத்திருக்கும் பயணியர் தவிப்பு

நிழற்கூரை முன்பாக கடைகள்: காத்திருக்கும் பயணியர் தவிப்பு

வால்பாறை: பயணியர் நிழற்கூரை முன்பகுதியை ஆக்கிரமித்து வைக்கபட்டுள்ள கடைகளால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் முன், பயணியர் வசதிக்காக சில மாதங்களுக்கு முன் புதிதாக நிழற்கூரை கட்டப்பட்டது. இங்கு வெளியூர் மற்றும் எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்களுக்காக பயணியர் காத்திருந்திருக்கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று, பயணியர் நிழற்கூரைக்குள் மக்கள் செல்ல முடியாத வகையில், முன்பகுதியில் காய்கறி கடை வைத்து வியாபாரம் செய்தனர். இதனால் பஸ்சிற்காக காத்திருக்கும் மக்கள் அவதிப்பட்டனர். நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'பயணியர் நிழற்கூரை முன் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கடைகளை வைக்கக்கூடாது என எச்சரித்துள்ளோம். அதையும் மீறி வாரம் தோறும் நடைபாதை வியாபாரிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இனி, ஆக்கிரமித்து கடை வைத்தால், நகராட்சி பணியாளர்களால் கடைகள் அகற்றப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி