உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கீரணத்தம் ஊராட்சியில் 30ல் கடையடைப்பு

கீரணத்தம் ஊராட்சியில் 30ல் கடையடைப்பு

கோவில்பாளையம்; கீரணத்தம் ஊராட்சியை, மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என வலியுறுத்தி, வருகிற 30ம் தேதி அனைத்து வீடுகளிலும், கருப்பு கொடி கட்டி, கடையடைப்பு செய்வதாக அறிவித்துள்ளனர். சர்க்கார் சாமக்குளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து கடந்த 26ம் தேதி நடந்த கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர். கீரணத்தம் ஊராட்சியை, கோவை மாநகராட்சி உடன் இணைக்கும் அரசாணை 21ஐ, திரும்பப் பெற வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.இது தொடர்பாக நேற்று பல்வேறு பொது நல அமைப்புகள், வணிக நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வருகிற 30ம் தேதி கீரணத்தம் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளிலும், கருப்பு கொடி கட்ட முடிவு செய்யப்பட்டது.காலை முதல் மாலை வரை கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை அடைத்து, அரசின் கவனத்தை ஈர்க்க தீர்மானிக்கப்பட்டது. போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பொது நல அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ