உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய போட்டிகள்; அணிகள் அசத்தல்

குறுமைய போட்டிகள்; அணிகள் அசத்தல்

கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில், 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள், இரு நாட்களாக நடந்தன. மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகள் பங்கேற்றன. தனிநபர், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி மாணவி ராஸ்மிகா, 100 மீ., ஓட்டம், 100 மீ., தடை தாண்டும் ஓட்டம், 200 மீ., ஓட்டம் ஆகிய போட்டிகளில் முறையே முதல், இரண்டு, முதல் இடம் என, 15 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 14 வயதுக்கு உட்பட்ட மாணவியர் பிரிவில், மாணவி எழில் ஓவியா, 100 மீ., ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் போட்டிகளில் முதல் இடத்தை பிடித்து, 15 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்தார். 19 வயது பிரிவில், ஸ்ரீ அவினாசிலிங்கம் பள்ளி மாணவி தேவிகா, 400 மீ., 800 மீ., 1,500 மீ., ஓட்டத்தில் முதலிடங்களை பிடித்து, 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தனிநபர் மாணவர், 14 வயது பிரிவில், ஸ்ருஷ்டி வித்யாலயா பள்ளி மாணவன் மணிகண்டன், 400 மீ., ஓட்டம், 80 மீ., தடையோட்டம், நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகளில் முதலிடத்துடன், 13 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். டி.ஏ.ராமலிங்க செட்டியார் பள்ளியின் மாணவர் கிஷோர்குமார், 17 வயது பிரிவில் 15 புள்ளிகளுடன் முதலிடம், மாணவர் கிர்லாஷ்குமார், 19 வயது பிரிவில் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தனர். இறுதியில், மாணவர் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி 100 புள்ளிகளுடனும், மாணவியர் பிரிவில் ஸ்ரீஅவினாசிலிங்கம் பள்ளி அணிகள் 181 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டங்களை தட்டிச் சென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை