மேலும் செய்திகள்
ஆட்டுக்கொள்ளை நோய் தடுப்பூசி போடுங்க!
29-Mar-2025
ஆட்டுக்கொள்ளை நோய் தடுப்பூசி போடுங்க
28-Mar-2025
கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிறுவன தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டம் மற்றும் சாரல் மழை காரணமாக, பகல் நேர வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகவே இருக்கலாம்.சரிவுக்கு குறுக்காக கோடை உழவு செய்வது, மழை நீரை நிலத்திலேயே தேக்கவும், மண் அரிப்பைத் தடுக்கவும் உதவும். மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து, நீர்ப்பாசனத்தை ஒத்தி வைக்கலாம்.கோடை கால சாகுபடியாக கம்பு பயிரிடலாம். மரவள்ளியில், வெள்ளை சுருள் ஈ கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாழையில் குருத்து அழுகல் நோய் காணப்படுகிறது. ஒரு லிட்டர் நீரில் 20 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து மரத்தின் அருகே ஊற்றவும். நோய் தாக்குவதற்கு முன் செய்தால், வராமல் தடுக்கலாம்.சில பகுதிகளில் செம்மறி மற்றும் வெள்ளாடுகளில், துள்ளுமாரி நோய் தாக்கம் காணப்படுகிறது. எனவே, ஆடுகளை வெயில் வந்த பிறகு மேய்ச்சலுக்கு விடவும். தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29-Mar-2025
28-Mar-2025