உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம்

கிணத்துக்கடவு: பா.ஜ., அரசை கண்டித்து கிணத்துக்கடவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்டில், கோவை தெற்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில், பொதுமக்களை சந்தித்து, பா.ஜ., அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தினர். இதில், கோவை தெற்கு மாவட்ட காங்., தலைவர் சக்திவேல், மாவட்ட துணைத் தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பா.ஜ., அரசு ஓட்டு திருட்டில் ஈடுபட்டதாகவும், மத்திய அரசின் திட்டங்களால் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி, மக்களிடம் கையெழுத்து பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ