உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம்

சூலுார்: சூலுார் வட்டாரத்தில், தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தீவிரமாக நடந்து வருகிறது. தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக, பா.ஜ., சார்பில், சமக்கல்வி எங்கள் உரிமை எனும் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. சூலுாரில் மாநில துணைத்தலைவர் பேராசிரியர் கனகசபாபதி கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். சூலுார் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட வாகராயம்பாளையம், பதுவம்பள்ளி, கரவழி மாதப்பூர் உள்ளிட்ட கிராமங்களில் கையெழுத்து இயக்கம் நடந்து வருகிறது. மாதப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ஏராளமான மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் மும்மொழி கல்விக்கு ஆதரவாக கையெழுத்திட்டனர். பா.ஜ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை