உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

 ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல்

அன்னுார்: அன்னுாரில், ரூ.6 லட்சம் மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அன்னுாரில், அவிநாசி சாலையில், சோமனுார் பிரிவு அருகே, நேற்று மாலை பறக்கும் படை அலுவலர் மணிவண்ணன் தலைமையில், சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் ஒரு காரை சோதனை செய்தனர். அதில், சூரத் பகுதியில் இருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு கொண்டு செல்ல முயன்ற ஆறு லட்சம் மதிப்பிலான ரேடியம் முலாம் பூசப்பட்ட விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட வெள்ளி நெக்லஸ், பிரேஸ்லெட், கம்மல், மோதிரம், கைகடிகாரங்கள் பிடிபட்டன. இப்பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. பறக்கும் படை அதிகாரிகள் இப்பொருட்களை, அவிநாசி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கல்பனா மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயராஜிடம் ஒப்படைத்தனர். அவிநாசி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உரிய ஆவணம் சமர்ப்பித்து தடையின்மை சான்று பெற்று வந்த பின், ஆபரணப் பொருட்கள் திரும்ப தரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை