உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிந்தி பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் அசத்தல்

சிந்தி பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் அசத்தல்

கோவை; சிந்தி சர்வதேச பள்ளி மாணவர்கள் நீச்சல் போட்டியில் தங்கம் வென்று, பெருமை சேர்த்துள்ளனர். பள்ளிகளுக்கு இடையேயான நீச்சல் போட்டியில், சிந்தி சர்வதேச பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவி யாழினி, நான்காம் வகுப்பு மாணவர் சஸ்விந்த் ஆகியோர் மூன்று தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவி யாழினி, 200 மீ., ஐ.எம்., பிரிவிலும், 100 மீ., 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவிலும் தலா ஒரு தங்க பதக்கம், 200 மீ., பிரீ ஸ்டைல் பிரிவில் வெள்ளி வென்றுள்ளார். மாணவர் சஸ்விந்த், 4*25 பிரீ ரிலேவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். 'மாணவர்களது கடின உழைப்புக்கும், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவுக்கும் சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது' என, பள்ளி முதல்வர் பாக்யலட்சுமி, வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ