உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போனஸ் வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம்

போனஸ் வழங்க கோரி உள்ளிருப்பு போராட்டம்

வால்பாறை: தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர்சங்கத்தின் சார்பில், தீபாவளி போனஸ் வழங்க கோரி, வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தற்காலிக துாய்மைபணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.துாய்மை பணியாளர்கள் கூறியதாவது:வால்பாறை நகராட்சியில் கடந்த, ஆறு ஆண்டுகளாக தற்காலிக துாய்மை பணியாளர்களாக பணிபுரிகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிகிறோம்.தீபாவளிக்கு சில தினங்களே உள்ள நிலையில், சம்பந்தப்பட்ட ஒப்பந்தாரர் இந்த ஆண்டு இது வரை போனஸ் வழங்காமல் இழுத்தடிக்கிறார். போனஸ் வழங்க மறுத்தால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு, கூறினர்.இந்நிலையில், நகராட்சி கமிஷனர் ரகுராமன் தலைமையில் நேற்று மாலை பேச்சு வார்த்தை நடந்தது. கவுன்சிலர்கள் மணிகண்டன், வீரமணி, கல்யாணி மற்றும் துாய்மை பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பேச்சு வார்த்தை முடிவில்,ஒப்பந்ததார்கள் சார்பில் துாய்மை பணியாளர்களுக்கு, 3 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, 3 ஆயிரம் ரூபாய் முன்பணம் என, 6 ஆயிரம் ரூபாய் வழங்க உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை