இளைஞர்களுக்கு இன்று திறன் வளர்ப்பு பயிற்சி
சூலுார்; இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் சூலூரில் இன்று நடக்கிறது.மத்திய அரசின் தீனதயாள் உபாத்தயாயா கிராமின் கவுசல்யா யோஜனா எனும் கிராமப்புற இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி திட்டத்தின் கீழ், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாநில, ஊரக, நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், இளைஞர் திறன் திருவிழா, சூலூரில் இன்று நடக்கிறது. யூனியன் அலுவலக வளாகத்தில், காலை, 8:00 முதல்,3:00 மணி வரை நடக்கும் பயிற்சியில், 18 முதல், 35 வயதுள்ளோர் பங்கேற்கலாம். 10 முதல் பட்டபடிப்பு வரை படித்தவர்கள் பங்கேற்கலாம். தையல் பயிற்சி, நர்சிங், சிறு வணிகம், தகவல் தொழில்நுட்ப சேவை, ஓட்டல் நிர்வாகம், அக்கவுண்ட் உதவியாளர் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும் செல்போன் சர்வீஸ், சிசிடிவி காமிரா, பிளம்பிங், ஒயரிங், தச்சு, அழகு கலை, இரு சக்கர வாகனம் பழுது நீக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். போக்குவரத்து செலவு, உணவு, தங்குமிடம் , சீருடை, காப்பீடு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும், என, அதிகாரிகள் கூறினர்.