உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயில் மார்க் ரவை மீது அவதுாறு; பங்குதாரர்கள் கமிஷனரிடம் புகார்

மயில் மார்க் ரவை மீது அவதுாறு; பங்குதாரர்கள் கமிஷனரிடம் புகார்

கோவை; மயில்மார்க் சம்பா ரவை நிறுவனம் குறித்து அவதுாறு பரப்பும் நபர்கள் மீது, நடவடிக்கை எடுக்க கோரி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் புகார் அளித்தனர். பங்குதாரர்கள் பொன்முருகன், பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு:கோவையை தலைமையிடமாகக் கொண்டு, செயல்பட்டு வரும் வன்னிய ராஜன் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில், மயில் மார்க் என்ற பெயரில் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக பருப்பு வகைகள், சம்பா ரவை, சேமியா உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருகிறோம். கடந்த சில மாதங்களாக, எங்களது தயாரிப்புகளில் விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்துகள், வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாக சிலர், பொய்யாக தகவல் பரப்பி வருகின்றனர்.எங்களது நிறுவன தயாரிப்புகளில், எந்தவித கலப்படமும் செய்யப்படுவதில்லை. எங்கள் தயாரிப்புகள் குறித்து அவதூறு பரப்பும் நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ