உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி

குறுவள அளவிலான கலைத்திருவிழா போட்டி

பெ.நா.பாளையம் : அரசு பள்ளிகளில் குறுவள அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் இம்மாதம், 14 முதல், 16 வரை நடக்கிறது என, அரசு பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், 'தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 2022 முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன. நடப்பு ஆண்டிலும், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த ஆக., 22ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதை கூறுதல், பேச்சு உட்பட பல்வேறு போட்டிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று, தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இதில், பள்ளி அளவிலான போட்டிகள் முடிவடைந்தன. குறுவளப் போட்டிகள் இம்மாதம், 14 முதல், 16ம் தேதி வரை அந்தந்த பள்ளி அளவில் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் பள்ளி அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, பங்கு கொள்ள செய்யப்படுகின்றனர். தொடர்ந்து வட்டார அளவிலான போட்டிகள் அக்., 17 முதல், 24ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்த போட்டிகளில் பங்கேற்க செல்லும் மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் கட்டாயம் பெற்று வர வேண்டும். வட்டார அளவிலான போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்த கட்டமாக மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாட தகுதி பெறுவர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !