உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குறுமைய அளவிலான போட்டி; காட்டம்பட்டி அரசு பள்ளி அசத்தல்

குறுமைய அளவிலான போட்டி; காட்டம்பட்டி அரசு பள்ளி அசத்தல்

அன்னுார்; எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில் காட்டம்பட்டி அரசு பள்ளி அதிக பதக்கங்களை வென்றது. சர்க்கார் சாமக்குளம் குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டியில், காட்டம்பட்டி தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அரசு மேல்நிலைப்பள்ளி அதிக பதக்கங்களை வென்றுள்ளது. மாணவர் கைப்பந்து போட்டியில் இப்பள்ளியின் 14 வயதுக்கு உட்பட்ட அணி முதலிடமும், 17 வயதுக்கு உட்பட்ட அணி இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. மாணவியர் கைப்பந்து போட்டியில் 17 வயது மற்றும் 19 வயதுக்குட்பட்ட இரு பிரிவுகளிலும் முதலிடம் பெற்று உள்ளது. 17 வயதுக்குட்பட்ட கபடி போட்டியில் இப்பள்ளி அணி முதலிடம் பெற்றது. மாணவி விவிதா 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் டேபிள் டென்னிஸில் முதலிடம் பெற்றார். மாணவி சத்யா 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100 மீ., ஓட்டம் மற்றும் தடை ஓட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றார். உயரம் தாண்டுதலில் மூன்றாம் இடம் பெற்றார். மாணவர் தனுஷ் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100 மீ., மற்றும் தடை தாண்டி ஓடுவதில் இரண்டாம் இடம் பெற்றார். மாணவி தக்சிதா டாக்ஸிதா 100 மீ., ஓட்டத்தில் முதலிடமும் பிரகதீஸ்வரி உயரம் தாண்டுதலில் இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். மாணவர் மாடசாமி கம்பு ஊன்றி தாண்டும் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார். இரட்டை கம்பு சிலம்பத்தில் மாணவி காவ்யஸ்ரீ இரண்டாம் இடமும், ஒற்றைக்கம்பு சிலம்பத்தில் ஜீவிதா இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். சாதித்த மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை