உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவு

6 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் பாடப்பிரிவு

பொள்ளாச்சி; உயர் தொழில்நுட்ப ஆய்வகம் கொண்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளில், அனைத்து வகுப்பு மாணவர்களும், 'ஸ்மார்ட் கிளாஸ்' பாடப்பிரிவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அதிக எண்ணிக்கையில் மாணவர்களை உள்ளடக்கிய அரசு மேல்நிலைப் பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் (ைஹடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, கல்வி உதவித் தொகை சார்ந்த பதிவுகள், மாணவர்களின் வருகை உள்ளிட்ட பல்வேறு விபரங்களை, ஆசிரியர்கள் உதவியுடன் 'எமிஸ்' தளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.மேலும், மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வழங்குவதுடன், 'ஆன்லைன்' தேர்வுகளும் நடத்தப்படுகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டு, அனைத்து வகுப்பு மாணவர்களும், 'ஸ்மார்ட் கிளாஸ்' பாடப்பிரிவில் பங்கேற்கும் வகையில், காலஅட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனை ஆசிரியர்கள் உறுதிபடுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது: ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் அனைவரும், 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பை தினமும் பயன்படுத்த வேண்டும். அதன்படி, ஒவ்வொரு வகுப்பு மாணவர்களும், நாள் ஒன்றுக்கு, 45 நிமிடம் 'புரொஜக்டர்' வாயிலாக 'ஸ்மார்ட் கிளாஸ்' பாடப்பிரிவின் பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது. இதற்காகவே, பள்ளிகள்தோறும், கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி