உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்; ரூ.4 கோடி நிலம் மீட்டது மாநகராட்சி

கோவை : ஒண்டிப்புதுார் எஸ்.எம்.எஸ்., லே-அவுட்டில் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த, நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள, 19 சென்ட் நிலத்தை, கோவை மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் நேற்று மீட்டனர்.கோவை, ஒண்டிபுதுாரில், 1960ல், 6.14 ஏக்கரில் எஸ்.எம்.எஸ்., லே-அவுட் உருவானது. அதில், 65 சைட் பிரிக்கப்பட்டது. பொது ஒதுக்கீடு இடமாக, பள்ளி கட்டுவதற்கு, 43 சென்ட், விளையாட்டு மைதானத்துக்கு, 19 சென்ட் ஒதுக்கப்பட்டது.அங்கு, தற்போது மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்படுகிறது. விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய இடம் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்தது. கட்டடங்கள் மற்றும் அலுவலகங்கள் செயல்பட்டன. மாநகராட்சிக்கு சொந்தமான அவ்விடத்துக்கு, மாநகராட்சி மூலமாகவே காலியிட வரி நிர்ணயிக்க, ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சித்தனர்.இது சம்பந்தமாக, ஐகோர்ட்டில் நடந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இதையடுத்து, அவ்விடத்தை மீட்டு, அறிவிப்பு பலகை வைக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டார்.மாநகராட்சி நகரமைப்பு அலுவலர் குமார், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் முத்துசாமி, உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் அவ்விடத்துக்கு சென்று, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.அவ்விடத்தில், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்' என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, நான்கு கோடி ரூபாய் இருக்குமென நகரமைப்பு பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர்.ஐகோர்ட் உத்தரவிட்டு, ஆறாவது நாளில், ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, நிலம் மீட்கப்பட்டிருக்கிறது. மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி, மாநகராட்சி பள்ளி மாணவர்களும், அப்பகுதியை சேர்ந்த குழந்தைகள் பயன்படுத்தும் வகையிலும், விளையாட்டு பூங்கா ஏற்படுத்த கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Subramanian Srinivasan
அக் 29, 2024 17:22

அதிமுக வினர் ஆக்ரமித்து கட்சி அலுவலகம்,கடைகள் கட்டி அனுபவித்து வந்தனர்.அதை பற்றி எழுதவில்லையே ஏன்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை