மேலும் செய்திகள்
கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது
12-Mar-2025
கோவை: வடவள்ளி பகுதியில் கஞ்சா, குட்கா கடத்தி வந்து விற்பனை செய்த நபரை, போலீசார் கைது செய்தனர். மாநகரில் கஞ்சா மற்றும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட, குட்கா பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை பிடிக்க, சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மாநகர போலீஸ் தெற்கு துணை கமிஷனர் உதயகுமாரின் சிறப்பு பிரிவு போலீசார் வடவள்ளி, ஆசிரியர் காலனி பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு நபர் மூட்டையுடன் நின்று கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்த போது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார். அவர் கணுவாய் பகுதியை சேர்ந்த சபரித், 24 என்பது தெரிந்தது. போலீசார் மூட்டையை திறந்து பார்த்த போது, 130 கிராம் கஞ்சா மற்றும் 328 கிலோ குட்கா இருந்துள்ளது. போலீசார் சபரித்தை கைது செய்தனர். கஞ்சா, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
12-Mar-2025