உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி

அரசு பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரத்தில் சிற்றுண்டி

கருமத்தம்பட்டி; சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் பணி நடக்கிறது.கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி யில், 10, 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுக்கு தயாராகும் வகையில் பள்ளியில் நடக்கும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்று படிக்கின்றனர்.காலை முதல் மாலை வரை படித்து களைப்புடன் இருக்கும் நிலையில், அவர்களின் களைப்பை போக்கும் வகையில், தன்னார்வலர்கள், அமைப்புகள் சார்பில், மாலை நேர சிற்றுண்டி வழங்கும் திட்டம், சில ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 400 மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கும் பணியை பேரூராட்சி தலைவர் சசிக்குமார் துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், உயிர் சமூக சேவை மையத்தினர், ஆசிரிய, ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், 'காலை முதல் மாலை வரை படித்த பின், உடலும், மனதும் சோர்வாக இருக்கும். அப்போது, தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்த முடியாது.அந்நேரத்தில் சிற்றுண்டி கிடைப்பதால், உடலும், மனதும் புத்துணர்ச்சி பெறுவதால், படிப்பில் கவனம் செலுத்த முடிகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !