பனி மூட்டம் சுற்றுலா பயணியர் குதுாகலம்
வால்பாறை: வால்பாறையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. பருவமழை துவங்கியுள்ள நிலையில் நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில் பனிமூட்டம் நிலவுகிறது. மழைப்பொழிவுக்கு இடையே வால்பாறை நகரில் பகல் நேரத்தில் குடியிருப்பு பகுதியை சூழ்ந்த பனி மூட்டத்தை, சுற்றுலா பயணியர் வெகுவாக கண்டு ரசித்தனர்.