எஸ்.என்.எஸ்., 9வது ஜூனியர் தடகளம்; 2,000 மாணவ, மாணவியர் களம்
கோவை; கோவை நேரு ஸ்டேடியத்தில், எஸ்.என்.எஸ்., 9வது ஜூனியர் தடகள போட்டிகள் நேற்று துவங்கியது; இன்று நிறைவடைகிறது.இதில், 100 மீ., 200 மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் மாணவ, மாணவியருக்கு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும், தனியார் என, 56 பள்ளிகளை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்i மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர்.நேற்று, 6 முதல், 10 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட போட்டிகளை, எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்துார பாண்டியன் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். உயரம் தாண்டுதல் போட்டியில், 17 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், ரிஷிவர்சா, மதுஸ்ரீ, எல்ஜினா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் அபினேஷ்குமார், அகுல்ஹமாது, தியானேஸ்வர் ஆகியோர் முதல் மூன்று இடங்களையும், 17 வயதுக்குட்பட்ட மாணவியருக்கான, 100 மீ., ஓட்டப்போட்டியில் இனியாஸ்ரீ, மிர்னாலயா, லட்சுமனஸ்ரீ ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இன்று, 11 முதல், 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.