எஸ்.என்.எஸ். அகாடமியின் 10ம் ஆண்டு விளையாட்டு விழா
கோவை: எஸ்.என்.எஸ். அகாடமி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ., பள்ளியின், 10வது ஆண்டு விளையாட்டு விழா, நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் துணை கமிஷனர்(வடக்கு) தேவநாதன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புவனேஸ்வரி ஆகியோர் போட்டிகளை துவக்கிவைத்தனர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து அணிகளை சேர்ந்த மாணவ, மாணவியரின் அணிவகுப்பு நிகழ்ச்சி, பார்வையாளர்களை கவர்ந்தது. தொடர்ந்து, 100 மீ., 200 மீ., 400 மீ., 800 மீ., 1,500 மீ., மற்றும், 4*100 தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. இப்போட்டிகளில், 700 பேர் திறமையை வெளிப்படுத்தினர். நிறைவில், நெருப்பு அணியானது, 1,200 புள்ளிகளுடன் 'சாம்பியன்ஷிப்' வென்றது. இரண்டாம் இடத்தை, 1,110 புள்ளிகளுடன் நீர் அணி வென்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, எஸ்.என்.எஸ்., அகாடமி முதல்வர் ஸ்ரீவித்யா பிரின்ஸ் பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி இயக்குனர் செந்தில்குமார், ஆசிரியர்கள் உடனிருந்தனர்.