உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ். ஆண்டு விழா

எஸ்.என்.எஸ். ஆண்டு விழா

கோவை: எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரி 24ம் ஆண்டு விழா நடந்தது. ப்ராக்டல் நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குநர் அருண் முனுஸ்வாமி பேசுகையில்,''செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வருகிறது. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். மாறிவரும் தொழில் உலகில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள கல்லூரி மாணவர்கள் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என்றார். பி.எச்டி., பட்டம் பெற்றவர்களை பாராட்டுதல், நிர்வாக சபை விருதுகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குநர் நளின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !