உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.என்.எஸ்., மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை

எஸ்.என்.எஸ்., மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை

கோவை; கேரளாவின், காஞ்சிரப்பள்ளியில் உள்ள அமல் ஜோதி பொறியியல் கல்லுாரியில், ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஹார்டுவேர் எடிஷனின், இறுதிப் போட்டி நடந்தது. 160 மாணவர்கள், 26 அணிகளாக போட்டியில் பங்கேற்றனர்.'செலவு குறைந்த பயோ எலக்ட்ரிக் வளர்ச்சி செயற்கை கை' என்று வழங்கப்பட்ட தலைப்பில், எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி அணியினர் தீர்வு கண்டு, ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் வெற்றி பெற்றனர்.கல்லுாரியின் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறையைச் சேர்ந்த மாணவர்கள் அபிஷேக், அர்ச்சனா, ஹம்சினி, மனோஜ் குமார், ரோஹித், அருணேஸ்வரன் ஆகிய மாணவர் குழுவினர் வெற்றி பெற்றனர். பேராசிரியர்கள் மனோகரன், தொழில்துறை வழிகாட்டி காட்வின் மஹிபாலன் ஆகியோர் வழிகாட்டினர்.குஜராத் ஐ ஹப் ஹிரண்மயி மஹந்தா, அமல் ஜோதி பொறியியல் கல்லுாரி முதல்வர் லில்லிகுட்டி ஜோசப், சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க் இந்தியா இயக்குனர் கணேஷ் நாயக் கொண்டடி ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ