மேலும் செய்திகள்
ரயில்வே ஸ்டேஷனில் காட்சிப்பொருளாக எஸ்கலேட்டர்
13-Jun-2025
கோவை; வடிவமைப்பு சிந்தனை, மேம்படுத்தப்பட்ட கல்வியை ஊக்குவிக்க கோவை வந்த ஜெர்மனி பேராசிரியருக்கு எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.வடிவமைப்பு சிந்தனை, மேம்படுத்தப்பட்ட கல்வியை ஊக்குவிக்க ஜெர்மனி போராசிரியர் குளோபல் டிசைன் திங்கிங் அலையன்ஸ் தலைவர் உலி வெய்ன்பெர்க் மூன்று நாள் பயணமாக கோவை வந்தார்.எஸ்.என்.எஸ்., கல்வி குழுமம் சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இப்பயணத்தின் போது, இன்ஜினியரிங், கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களால் உருவாக்கப்பட்ட அஜன்டிக் ஏ.ஐ., செய்முறை பயிற்சி திட்டங்கள் விளக்கப்பட்டன.கல்லுாரியின் மாதிரி வகுப்புகள், புதிய கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை அவர் கேட்டறிந்தார்.தொழில் ஆர்வலர்களைச் சந்தித்து உரையாடினார். எஸ்.என்.எஸ்., கல்வி குழும முதல்வர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் முதல்வர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜலட்சுமி மற்றும் தொழில்நுட்ப இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
13-Jun-2025