உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூரிய ஒளி மின் சக்தி விழிப்புணர்வு முகாம்

சூரிய ஒளி மின் சக்தி விழிப்புணர்வு முகாம்

அன்னுார்; அன்னுாரில் சூரிய சக்தி மின் திட்ட விழிப்புணர்வு முகாம் இன்று (2ம் தேதி) நடக்கிறது. வீடுகளுக்கான பிரதம மந்திரியின் சூரிய சக்தி மின் திட்டம் குறித்து, பொதுமக்களிடம் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் அன்னுார் அருகே நாகமாபுதூரில், அன்னுார் தெற்கு மின் வாரிய அலுவலகத்தில், விழிப்புணர்வு முகாம் இன்று (2ம் தேதி) காலை 10:00 மணி முதல், மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது. முகாமில், சூரிய ஒளி மின் உபகரணம் நிறுவ ஆகும் செலவு மற்றும் கிடைக்கும் பயன்கள் குறித்து அதிகாரிகள் விளக்க உள்ளனர். வங்கி அதிகாரிகளும் பங்கேற்று வங்கி கடன் பற்றி விளக்க உள்ளனர். பொதுமக்கள் பங்கேற்று பயன் பெற மின்வாரிய அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை