உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சோலார் தொழில்நுட்பம்; பல்கலையில் பயிற்சி முகாம்

சோலார் தொழில்நுட்பம்; பல்கலையில் பயிற்சி முகாம்

கோவை, ; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில், விவசாயத்தில், சோலார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண் பல்கலை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் டீன் ரவிராஜ், பயிற்சியைத் துவக்கி வைத்தார்.அவர் பேசுகையில், 'இந்திய சூழலுக்கு ஏற்பட, விவசாய சமூகத்துக்கு வேளாண் சூரிய ஒளி மின் தொழில்நுட்பத்தில், புதுமைகளுக்கான தேவை' குறித்து விளக்கினார்.செபா தலைவர் ரகுராஜ் அர்ஜுனன், விவசாயத்தில் சோலார் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் முக்கியத்தும், நாடு முழுதும் செயல்படுத்தப்படும் பல்வேறு சூரிய போட்டோவோல்டிக் திட்டங்கள் குறித்து விளக்கினார்.வேளாண் - சூரிய ஒளி மின் அமைப்புகளின் அடிப்படைகள் குறித்தும் விளக்கினார். இங்கிலாந்து டீசைடு பல்கலை பேராசிரியர் செந்திலரசு சுந்தரம், வேளாண் பல்கலை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை பேராசிரியர் மகேந்திரன் உட்பட ஜெர்மன் சர்வதேச மேம்பாட்டு சங்கம், எர்னஸ்ட் அண்டு யங் குளோபல் நிறுவனம், பசுமை வேலைகளுக்கான திறன் கவுன்சில் உறுப்பினர்கள், ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ