உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி

சூலுார்: காடாம்பாடி ஊராட்சியில், திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு பேரணி நடந்தது. ஊரக வளர்ச்சி முகமை சார்பில், திடக்கழிவு மேலாண்மை விதிகள், -2026 குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் பிரசாரம் நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வீடுகளில் சேரும் குப்பையை தரம் பிரித்து சேமிப்பது, பிளாஸ்டிக் கழிவுகள் தவிர்க்கும் முறை, பொது இடங்கள், சாக்கடை கால்வாய்கள், நீர் நிலைகளில் குப்பை கொட்டுவதை தடுக்கும் முறை குறித்து பிரசாரம் செய்யப்பட்டது. குபபையை சேகரித்து தரம் பிரித்து மறுசுழற்சி செய்வதால், தேக்கமடைவது குறைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பது குறித்தும் விளக்கப்பட்டது. விழிப்புணர்வு பாதகைகளை ஏந்தி மாணவ, மாணவியர் பேரணியில் சென்றனர். பள்ளிகளில், ஈரக்கழிவு, உலர் கழிவு, மருத்துவ கழிவு, சிறப்பு கவனத்துக்குரிய கழிவுகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அப்துல் வகாப், சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி செயலாளர், விமானப்படை விங் கமாண்டர்கள் சசிகாந்த், நேஹா சவுத்திரி மற்றும் மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை