மேலும் செய்திகள்
புதிய மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தாச்சு!
24-Sep-2024
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மையை, ஒன்றிய அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை முறையாக தரம் பிரிக்கப்படுவதில்லை. மாற்றாக ரோட்டோரத்தில் குப்பை குவிக்கப்பட்டு, ஊராட்சி பணியாளர்கள் வாயிலாக எரிக்கப்படுகிறது.குறிப்பாக, கோவில்பாளையம் - நெகமம் ரோடு மற்றும் கிணத்துக்கடவு, வடசித்தூர் - நெகமம் ரோடுகளில் அதிக அளவு குப்பை ரோட்டோரத்தில் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை பிரிக்காமல் தீ வைத்து எரித்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் காற்றும் மாசுபடுகிறது.சில ஊராட்சிகளில், மக்காத குப்பையை குழியில் கொட்டி தீ வைத்து எரிக்கின்றனர். சில ஊராட்சிகளில், மக்கும், மக்காத குப்பையை தரம் பிரித்து வருமானம் ஈட்டி வருகின்றனர்.ரோட்டோரத்தில் கொட்டப்படும் குப்பையை தவிர்க்க, அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை தொட்டி வைத்து அதன் வாயிலாக, குப்பையை சேகரித்து திடக்கழிவு மேலாண்மையை கையாள வேண்டும்.ரோட்டில் குப்பை கொட்டுவதை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்க வேண்டும். குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஒன்றிய அதிகாரிகள் கள ஆய்வில் கண்காணிக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
24-Sep-2024